Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரண்டு நாள் முக்கிய நிகழ்வு….. என்ன ஸ்பெஷல் தெரியுமா…??

விவசாயத்தை ஊக்குவிப்பது குறித்து திருப்பதியில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்விற்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலை தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை பயன்படுத்தி செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கோசாலை பராமரிப்பு, பசுக்கள் பாதுகாப்பு இயற்கை விவசாயம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் கோ மகா சம்மேளனம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்விற்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுதொடர்பாக தேவஸ்தான செயல் அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது திருப்பதி தேவஸ்தானம், யுகா துளசி பவுண்டேஷன் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ஸ்ரீ கௌதம் மகா தீர்த்த பத்மாமொடா ஆகியவற்றுடன் சேர்ந்து கோ மகா சம்மேளனத்தின் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.

இதில் விவசாய பொருள்கள் விளைவிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் தரிசு நிலத்தில் நிலத்தடி நீரை சிறப்பான முறையில் பயன்படுத்தி எவ்வாறு விவசாயம் செய்வது எனவும் பயிற்றுவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீங்குகள் குறைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து விவசாயிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். பின்னர் பசுக்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் தூய பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் பேசினார். மேலும் ஆர்ஜித் சேவைகள் அணிவிக்கப்படும் இயற்கையான மலர்கள் கொண்டு அகதிகள் தயாரிப்பு ஆகியவற்றை தேவஸ்தானத்தின் கோயில்களும் செயல்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

Categories

Tech |