Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை….. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது திருப்பதி திருமலையில் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த விழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி மலை பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் அதிகமாக கலந்து கொள்வார்கள் என்பதனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் இந்த வருடம் திருமலை பாதையிள் மின்சார பேருந்து இயக்கப்படுகிறது தற்போது நடைபெற்ற இந்த பிரமோற்சவ விழாவானது அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |