Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசனம் டோக்கன் தேதி அறிவிப்பு…. பக்தர்களே உடனே பாருங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதாவது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்குகிறது. பத்து நாட்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 2 முதல் 11ஆம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதனிடையே வைகுண்ட ஏகாதேசியில் முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Categories

Tech |