திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் போன்ற அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படைத்துறை, காவல்துறை அதிகாரியின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விடைக்கு விற்று அதிகமாக பணம் சம்பாதிக்கும் இடைத்தரகங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
சாமி தரிசனம் மற்றும் அறைகளுக்கான சிபாரிசு கொடுக்கும் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். மேலும் திருமலையில் உள்ள இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது அதிகமாக உள்ளது. இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து சாமி தரிசனத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.