Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதியில் செருப்பு அணிந்த சர்ச்சை….. நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த மறுநாளே அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி ‘முக்கிய பிரமுகர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்படும். அவர் அளிக்கும் பதிலை வைத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |