ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை
Categories