Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களுக்கு அல்வா… தரிசன டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள மெகா மோசடி… மக்களே உஷாரா இருங்க…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டில் மோசடி நடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து இல்லால் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். ஊரடங்கு கட்டுப்பாட்டில் உள்ளதால் தரிசன டிக்கெட் பெறுவதில் பிரச்சினைகள் உள்ளன. அதை பயன்படுத்தி மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஒன்றிய அமைச்சர் கிருஷ்ணன் ரெட்டி பேரில் அரங்கேறிய மோசடியின் அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த மோசடி அரங்கேறியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் அலிபிரி சோதனைச்சாவடியில் டிக்கெட்டுகளை காண்பித்த பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களின் மூலம் வரக்கூடிய பக்தர்கள் கடிதங்களை காண்பித்தால் திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அறங்காவலர்கள் குழு தலைவர் சுப்பா ரெட்டி பரிந்துரையில் வரும் பக்தர்களுக்கு முன்கூட்டியே எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த எஸ்எம்எஸ் ஐ அலிபிரி சோதனை சாவடியில் காண்பித்தால் திருமலை கோவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த எஸ்எம்எஸ் ஐ பயன்படுத்தி தான் ஒரு மர்ம கும்பல் மோசடியை அரங்கேற்றியுள்ளது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் 13 பேர் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் பெற திருப்பதியை சேர்ந்த ஏஜென்டுகளான கிஷோர் மற்றும் நாகராஜ் அணுகினர் அவர்களிடம் 14,000 ஆயிரத்து 520 ரூபாய் பணத்தை கொடுத்து உள்ளனர்.

அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி பரிந்துரையை பெற்றுள்ளதாக கூறி எஸ்எம்எஸ் அனுப்பி வைத்துள்ளனர். அந்த எஸ்எம்எஸ்சில் வெங்கடேஷ் குழுமத்தினர் சோதனைச் சாவடியில் காண்பித்து திருக்கோயிலுக்குள் சென்று உள்ளனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் இது சுப்பாராவ் ரெட்டியிடம் வந்த எஸ்எம்எஸ் இல்லை என போலீசார் கூறியதால் வெங்கடேஷ் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்ததோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விசாரணையை தொடங்கிய போலீசார் கிஷோர் மற்றும் நாகராஜனை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் வேறு ஒரு பக்தருக்கு அறங்காவலர் குழு தலைவர் களுக்கு ஏற்ப அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ்சில் பெயரை மற்றும் மாற்றி வெங்கடேஷ் குடும்பத்திற்கு கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலம் என்பதால் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரக்கூடிய பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பெற்றிருக்க வேண்டும் என்றும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |