Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறைகள் பெற…. புதிய பதிவு மையங்கள் திறப்பு….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில்திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. அதன்படி ஜூன் மாதம் முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து திருப்பதி திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் பெற புதிய பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி ராம்பக்கீச்சா, கௌஸ்துபம் விடுதி, பேருந்து நிலையம், சிஎன்சி டோல்கேட், எம்பிசியில் திறக்கப்பட்ட பதிவு மையங்களில் ஆதார், ரேஷன் கார்டு, லைசென்ஸ் மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒன்றை காண்பித்து அறை முன்பதிவு செய்யலாம். சிறிது நேரத்தில் செல்போனுக்கு தகவல் வந்ததும் விடுதிக்குச் சென்று பணம் செலுத்தி சாவியை பெறலாம்.

Categories

Tech |