திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். அதனை தொடர்ந்து ஜனவரி 22 வரை 10 நாட்கள் பரமபதவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 45,000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories