Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பிரம்மோற்சவம்… துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார் ஜெகன்மோகன் ரெட்டி…!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை வந்த ஜெகன்மோகன் ரெட்டி துலாபாரம் கொடுத்து வழிபட்டார்.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று கருடசேவை நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தரிசனம் செய்தார். ஆறாவது நாளான இன்று ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். முன்னதாக திருப்பதி வந்த ஜெகன் மோகன் ரெடி புதுப்பிக்கப்பட்ட அலிபிரி நடைபாதையை திறந்து வைத்தார். பின்பு ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு நேர்த்திக்கடனாக எடைக்கு எடை அரிசி துலாபாரம் செலுத்தினார்.

தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அவர்களின் எடைக்கு நிகராக அரிசி வெல்லம் அல்லது பிற தானியங்களை துலாபாரத்தில் வழங்குவர். இது திருப்பதியின் பாரம்பரிய நிகழ்வாக இருந்து வருகிறது. இதேபோல் ஜெகன்மோகன் ரெட்டி தனது எடைக்கு நிகரான 78 அரிசியை வழங்கினார். திருப்பதியில் நேற்று 20 ஆயிரத்து 850 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூபாய் 2.45 கோடி உண்டியல் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |