Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் மூன்று நாட்கள்… அனைத்து சேவைகளும் ரத்து… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் இலவச தரிசன டிக்கெட் கொடுப்பது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் அனைவரும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் விஐபி தரிசன டோக்கன் வாங்க நேரில் வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.

Categories

Tech |