Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடு…. வெளிநாட்டில் இருந்து நவீன மெஷின் வாங்க முடிவு…. வெளியான தகவல்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அதன் பிறகு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் தினந்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 1 லட்டு இலவசமாக வழங்கப்படும். அதன் பிறகு மேற்கொண்டு லட்டுகளை வாங்க விரும்பினால் ரூபாய் 50 செலுத்தி எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம்.

ஆனால் சமீப காலமாக பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ,லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூபாய் 50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் தினம் தோறும் 4 லட்சம் லட்டுகளும், 15000 வடைகளும், 2,000 கல்யாண உற்சவ லட்டுகளும் தயாரிக்கப்படுகிறது. இதற்காக தேவஸ்தானம் சார்பில் 80 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 616 ஊழியர்களும் வேலை செய்கின்றனர். இவர்கள் 3 ஷிப்ட் முறையில் வேலை செய்தாலும் கூட ஒரு நாளைக்கு 4 லட்சம் லட்டுகளுக்கு மேல் தயார் செய்ய முடிவதில்லை.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பூந்தி தயாரிக்கும் மெஷினை வாங்குவதற்கு தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் 1 நாளைக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகளை தயார் செய்ய முடியும். மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு மூலமாக ஒரு வருடத்திற்கு ரூ. 400 கோடி வருமானமும், அறை வாடகை, அர்ஜித சேவை மற்றும் உண்டியல் வருமானம் போன்றவற்றின் மூலம் வருடத்திற்கு ரூ. 3000 கோடியும் வருமானமாக கிடைக்கிறது. எனவே நவீன மெஷின் மூலம் கூடுதல் லட்டுகளை தயாரித்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |