Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு…? பக்தர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!!!

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்துக்கு கூடுதலாக இரு லட்டுகள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு சென்ற லட்சக்கணக்கான லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சென்னைக்கு லட்சக்கணக்கான லட்டுகள் கொண்டு சென்றதாலும், தற்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதாலும் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் ஒரு குடும்பத்திற்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

Categories

Tech |