லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணமானது திருப்பதியில்வைத்து நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் இந்த ஜோடியின் திருமணமானது மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. வருகிற ஜூன்மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் இவர்களின் திருமணம் நடைபெறயிருப்பதாக தகவல்கள் கசிந்தது. எனினும் இவ்விரு நட்சத்திரங்களின் திருமணத்தை திருப்பதியில் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதில் சில சிக்கல்களை திருப்பதி தேவஸ்தானம் எதிர்கொண்டது. இதனால் திருப்பதியில் நடைபெற இருந்த இத்திருமணம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டு மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாரா -விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ் சமூகவலைத்தளங்களில் கசிந்திருப்பதன் வாயிலாக இத்தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, நயன்தாரா – விக்னேஷ்சிவன் குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக 150நபர்கள் இத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோரப்பட்டு உள்ளது. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி கொடுப்பது என்பது முடியாது. ஏனென்றால் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதே சமயத்தில் தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது.
இதனிடையே இப்படி ஒரு நட்சத்திரங்களின் திருமணம் எனில் அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். ஆகவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகதான் திருப்பதியில் நடைபெற இருந்த இவர்களது திருமணம் மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற இருப்பதாகவும், சென்னையில் பிரம்மாண்டமான அளவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த காதல்ஜோடி திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.