Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து….. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து மறு நாளான அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டு நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணத்தன்று 12 மணி நேரம் கோவில் நடை சாத்தப்படுகிறது. அன்றும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |