திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் இன்றும் ஜனவரி 1ஆம் தேதியான நாளையும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் நாலு புள்ளி 50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இதற்காக ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் டிக்கெட் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் இன்று முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை ஆஃப்லைனில் திருப்பதி மாதவன் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை காண 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தி பெறும் விஐபி டிக்கெட் வழங்குவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.