திருப்பதி திருமலையில் 2 கிராம் தங்க டாலர் பத்தாயிரம் ரூபாய், 5 கிராம் டாலர் 25,000 ரூபாய் மற்றும் 10 கிராம் டாலர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்து. இந்த நிலையில் கொரோனா பரவால் காரணமாக இரண்டு கிராம், 5 கிராம் டாலர் விற்பனை நிறுத்தப்பட்டு 10 கிராம் சாமி டாலர்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
எனவே விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் சாமானிய பக்தர்கள் வாங்க முடியாமல் இருந்து வந்தது. எனவே இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் முறையிட்டதால், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீண்டும் 2 கிராம் 5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.