தென்மாநிலங்களில் தடத்தைப் பதிக்க முயற்சிக்கும் பாஜக தற்போது திருப்பதி இடைத்தேர்தலை குறி வைத்துள்ளது.
திருப்பதி மக்களவைத் தொகுதியில் இடைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன் வியூகம் தொடர்பாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுடன் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் தலைவர் பல்லி துர்கா பிரசாந்த் ராவ் சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மேலும் தென் மாநிலங்களில் தடத்தைப் பதித்த முயற்சிக்கும் பாஜக, அதன் முக்கிய நகர்வாக திருப்பதி இடைத்தேர்தலை குறி வைத்துள்ளது.