Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

நேற்று முன்தினம் வார விடுமுறை நாள் என்பதால் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வாகனங்களிலும், நடைபயணமாகவும் வருகை புரிந்தனர். இதில் இலவச தரிசன டிக்கெட் பெற முயற்சித்த பக்தர்கள் கவுண்டர்கள் மூடியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே செவ்வாய்கிழமை வரையிலான தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும், புதன்கிழமை தான் இனி டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதையும் அறிந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து தரிசன டிக்கெட் பெற முடியாத விரக்தியில் அலிபிரி சோதனை சாவடி அருகே பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் சாலையில் படுத்து உருண்டு ஒரு சில பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அலிபிரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.

Categories

Tech |