புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறக்கின்றது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக பயணம் மேற்கொள்கின்றார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு இருந்ததால் திருப்பதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நாளை ஞாயிற்றுக்கிழமை பிறப்பதால் இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெருமாளுக்கு விரதம் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி நோக்கி பாதயாத்திரை பயணத்தை தொடங்கியுள்ளனர். மேலும் வேலூருக்கு வந்து அவர்கள் செங்கோட்டை பூங்காவில் சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க போகிறோம் எனக் கூறி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என பெருமாளின் நாமத்தை உச்சரித்தபடி ஆன்மீக பாதயாத்திரை தொடர்ந்து உள்ளனர்.