Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்…. மீண்டும் குவியும் பக்தர்கள்… 2 கோடியை தாண்டிய உண்டியல் வருமானம்…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானமாக ரூபாய் 2 1/4 கோடி கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக தற்பொழுது பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்திற்கு அமெரிக்க படுவதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 31,558 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.  அதைத்தொடர்ந்து  நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இதில் ரூபாய் 2 கோடியே 77 லட்சம் கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |