Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும்…. பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா காரணமாக 2 மற்றும் 5 கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்கசாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர்.

ஒரு நாளைக்கு 5 அல்லது 6 டாலர்கள் மட்டுமே விற்பனையானது. இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பக்தர்களின் புகார்களை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் 2,5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |