திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.அதாவது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை விரைவு தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு நாளை அதாவது ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.