திருப்பதி கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக முந்தைய நாள் இரவு ஏகாந்த சேவைக்கு பிறகு தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் காலை 5 மணி முதல் 8 மணி வரை சாமியை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தது. இந்நிலையில் திருப்தி தேவஸ்தானம் வி.ஐ.பி பிரேக் தரிசன நேரம் காலை 8 மணிக்கு தொடங்கும் விதமாக மாற்றியது. இதனால் காலை 5 மணி முதல் 8 மணி வரை 15,000 சாமானிய பக்தர்கள் சர்வ தரிசனம் மூலமாக சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் காலை விடிந்தவுடன் சாமியை தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக புதிய நடைமுறை அமைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.
Categories