Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. “ஏப்ரல் 4 முதல்” வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது திருப்பதி கோவிலுக்கு தரிசிக்க வரும் 1 வயது குழந்தையுடன் வரும் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன சலுகை வழங்கப் பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்த சிறப்பு சலுகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு சலுகையை மீண்டும் தொடங்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், சனி உள்ளிட்ட நாட்களில் காலை 10 மணி முதல் தெற்கு மாட வீதியில் உள்ள சிறப்பு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் ஒரு நாளைக்கு 1,000 பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |