Categories
Uncategorized தேசிய செய்திகள்

“திருப்பதி ஏழுமலையான் கோவில்”… 40 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…..!!!!!

மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்துக்கு குவிந்து வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்புவரையிலும் 40,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் திருப்பதியில் 3இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகளானது வழங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் பெரும்பாலானோர் திருப்பதியில் தரிசனத்துக்கு குவிந்தனர்.

அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இந்த கோவிலுக்கு குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுமதிக்கும் வைகுண்ட காம்ப்ளக்சில் 30 அறைகளும் நிரம்பி வழிகிறது. அத்துடன் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முதல் லக்கேஜ் கவுண்டர் வரையிலும் கிலோ மீட்டர் கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பின் பக்தர்கள் 40 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |