Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்…. டிசம்பர் 24 முதல்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மேலும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பின்னர் கொரோனா பெரும்தொற்றை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்க முடிவு செய்தது.

இதையடுத்து முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு தினசரி திருப்பதி ஏழுமலையான் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகிய இரண்டையும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வகையில் வரும் நாட்களில் வெளியிட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 1 நாளைக்கு 20,000 வீதம் 1 மாதத்திற்கு 6,20,000 டிக்கெட்டுகளை நாளை காலை 9 மணி அளவில் வெளியிட உள்ளது.

அதேபோன்று இலவச தரிசன டிக்கெட்டுகளை 1 நாளைக்கு நேரில் வருபவர்களுக்கு 5,000 மற்றும் ஆன்லைனில் 5,000 என தினசரி 10,000 டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன. அவற்றில் 1 மாதத்திற்கு ஒரு 1,55,000 டிக்கெட்டுகள் நாளை மறுநாள் காலையில் 9 மணி அளவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பக்தர்களுக்கு தங்களது தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |