திருப்பதி கோயிலில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
திருப்பதி கோவிலில் தரிசனத்திற்காக பகதர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கும், கோவிலில் உள்ள சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோவிலில் இன்று 3599 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 91 பேருக்கு நோய் தொற்று இருப்பது கதறியப்பட்டுள்ளது.
91 பேரில் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.முன்னதாக கோவிலில் தரிசனத்திற்காக 60 வயதிற்கு மேற்பட்ட வரும் 10 வயதுக்குட்பட்டோருக்கும் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. மற்றவர்கள் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருப்பதி கோயிலில் மேலும் 91 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் செப்டம்பரில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் குறித்து ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.