Categories
ஆன்மிகம்

திருப்பதி கோவிலில்…. சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவில்கள் உட்பட அனைத்து பொதுஇடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவலா படிப்படியாக குறைந்ததையடுத்து பொதுமக்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் மக்கள் கோவிலில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பதியில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு மூலம் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்காக நுழைவு முன்பதிவு டிக்கெட்டுகள்  https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 300 ஆகும். இதையடுத்து நேற்று காலை 9 மணி முதல் பகதர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |