கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வருகையானது அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி நடிகையான காஜல்அகர்வால் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது அவரது கணவரும் உடன் இருந்தார். இதையடுத்து கோயில் வளாகத்திலுள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் காஜலுக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தமும், பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
கணவருடன் இணைந்து முதன் முறையாக திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.