திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக உத்தரபிரதேஷ் மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் சென்ற வாரம் வியாழக்கிழமை வந்துள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தன் சிபாரிசு கடிதம் வாயிலாக டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய்.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, அதன்பின் வி.ஐ.பி. டிக்கெட் ரூபாய்.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அங்கு உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு இருந்த ஊழியர்களிடம் அர்ச்சனா கவுதம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இந்த நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் தன்னிடம் தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறி அவர் அந்த அலுவலகத்தில் இருந்தபடி செல்பி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை நடிகை அர்ச்சனா கவுதம் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். அவற்றில் இந்துமத ஸ்தலங்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் விஐபி தரிசனம் எனும் பெயரில் ரூபாய்.10,500 கேட்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
भारत के हिंदू धर्म स्थल लूट का अड्डा बन चुके हैं धर्म के नाम पर तिरुपति बालाजी मैं महिलाओं के साथ अभद्रता करते,यह टीटीडी के कर्मचारी पर कार्यवाही होनी चाहिए । मैं आंध्र गवर्नमेंट से निवेदन करती हूं।ओर यह VIP दर्शन के नाम पर 10500 एक आदमी से लेते है । इसे लूटना बंद करो । @INCIndia pic.twitter.com/zABFlUi0yL
— Archana Gautam (@archanagautamm) September 5, 2022