Categories
ஆன்மிகம்

திருப்பதி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியீடு….. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Categories

Tech |