நாடு முழுவதிலும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் முழு ஊரடங்கு பெரும்பாலான மாநிலங்களில் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் அனைவரும் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஜூன் மாத விரைவு தரிசனத்திற்கான டிக்கெட் இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் முன்பதிவு தொடங்கியது. அதன்படி தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் சுவாமி தரிசனம் முன்பதிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.