மதுரை மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைந்துள்ளது. இங்கு கட்டுமான மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதற்காக அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரை பணிமனைக்கு பராமரிப்பிற்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்த ரயில்கள் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 4:20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி புறப்பட்டு சென்றது. இதனால் இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்து இருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக இந்த ரயிலில் திருப்பதிக்கு தரிசனத்திற்காக செல்லும் பயணிகளே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இந்த காலதாமதத்தினால் அவர்களுக்கு திருப்பதி தரிசன முன்பதிவிலும் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.