Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் ஏழுமலையான் பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனால் கூடுதலாக சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும். திருப்பதியில் தினம்தோறும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும்,ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலமாக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இருந்தாலும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால்,திருப்பதிக்கு பயணிகள் வரும் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Categories

Tech |