Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணிநேரம் ஆனது. இது பற்றி தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: “தற்போது கோடை விடுமுறை என்பதால் எதிர்பாராத வகையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமலைக்கு பக்தர்கள் யாரும் வர முடியாத காரணத்தினால் தற்போது வந்து செல்கின்றனர். கோவிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொறுமையை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்”.

Categories

Tech |