Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தற்போது சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மாதம்தோறும் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது.

இலவச தரிசன டிக்கெட் மட்டும் நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது தினந்தோறும் 75 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் இந்த மாதம் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக தென் மத்திய ரயில்வே துறை கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படியே ஹைதராபாத் -திருப்பதி, திருப்பதி -காக்கிநாடா, திருப்பதி -ஐதராபாத், திருப்பதி-காச்சிகுடா இடையே சிறப்பு ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டது வருகின்றது. திருச்சி -காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மற்றும் நாளை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |