Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரொம்ப கஷ்டம் சாமி!….இரண்டு நாட்கள் வெயிட்டிங்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது சனி, ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் திருமதி ஏழுமலையானை தரிசித்து விடலாம் என்று கிளம்பி விட்டார்கள். திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இரும்பு கம்பிகளால் ஆன க்யூ அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் விடுமுறை நாட்களில் இந்த க்யூவை தாண்டி பல கிலோமீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை நீண்டு விடுகிறது. அதன்படி நேற்றைய நிலவரம் ஆக்டோபஸ் கட்டிடத்திற்கு அருகில் உள்ள அவுட்டோர் ரிங் ரோடு வரை பக்தர்கள் வரிசை நீண்டு விட்டது. இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாராந்திர அபிஷேகம் சேவை நடைபெற்றது.

இதனால் கூட்ட நெரிசல் அதிகமாகி 64,000 பக்தர்கள் பேர் மட்டும் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றைய தினம் ஒவ்வொரு மணி நேரத்திலும் பக்தர் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. காலையில் எஸ்.எம்.சி. காட்டேஜ் வரையிலும், அதன் பிறகு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வழியாக அவுட்டர் ரிங் ரோடு வரையிலும் வரிசை நீண்டது. இந்த வரிசையில் பக்தர்கள் சுமார் 6 முதல் 7 கிலோமீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 56, 546 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இவர்கள் அனைவரும் முந்தைய நாள் வந்தவர்கள். அதன் பிறகு வந்தவர்கள் இரண்டு நாட்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது வெள்ளத்தில் திருமலை தத்தளித்து கொண்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் தங்களுடைய சாமி தரிசனத்தை சற்று ஓத்தி வைக்குமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் கேட்டு உள்ளது.

இதற்கிடையில் பக்தர்களின் கூட்ட நெரிசல் காரணமாக விஐபி தரிசனத்தை வருகின்ற 21ஆம் தேதி வரை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா வெளியிட்டுள்ள செய்தியில், சாதாரண பக்தர்களுக்கு முடிந்தவரை அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் 8 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு, சுதந்திர தினம் விடுமுறையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாமி தரிசனத்திற்கு குறைந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பது கவலை அளிக்கிறது. முடிந்த வரை எந்த ஒரு சிக்கலும் ஏற்படாமல் சாமி தரிசனம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |