Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம குட் நியூஸ்…. உடனே கிளம்புங்க …. சூப்பர் அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்படி கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் கோவில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். கொரோனா பரவல் காரணமாக ரூ.300 கட்டண சிறப்பு தரிசன முறை மட்டுமே அமலில் இருந்தது.

அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு தேவஸ்தானம் ஒவ்வொரு மாதமும் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடப்பட்டது. கொரோனா கால கட்டத்திற்கு முன்பாக ஆந்திர மாநிலத்தில் அரசு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுகளுடன் ரூ.300 செலுத்தினால் சிறப்பு தரிசன டிக்கெட்டையும் வழங்கி வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பஸ் டிக்கெட்களுடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது 1000 தரிசன டோக்கன்கள் வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத், விஜயவாடா, ராஜமுந்திரி, பெங்களூர், சென்னை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பேருந்துகளில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பேருந்துகளில் திருப்பதிக்குச் செல்ல முன்பதிவு செய்யும் பக்தர்கள் கூடுதலாக ரூ.300 கட்டணம் செலுத்தினால் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.

Categories

Tech |