Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. டிசம்பர் 16 முதல் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையானை வழிபட 300 ரூபாய் தரிசன டிக்கெட் தேவஸ்தான நிர்வாகம் வெளியிடுகிறது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி களில் காலை 9 மணிக்கு இணையதளத்தில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலையில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |