Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டோக்கன்கள் வழங்கப்படவில்லை. அதனால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் சிறப்பு தரிசன டோக்கன் ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்பட்டது.

ஒரு நாளில் ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான டோக்கன் தேவஸ்தான அலுவலகத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு, மற்ற நாட்களில் காலை 10 மணிக்கும் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்கள் ஆன்லைனில் எப்போது வரும் என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அவ்வப்போது அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |