ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக திருமலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இது நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகளால் மாரடைப்பு ஏற்பட்டால், இந்த ஊசி மூலம் உடனடி பாதுகாப்பு கிடைக்கும். தென் இந்தியாவில் ரூயா மருத்துவமனை மட்டுமே இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
திருப்பதி சுற்றியுள்ள 13 இடங்களில் இந்த ஊசி போடப்படும். சந்தையில் இதன் மதிப்பு 35 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் மக்களின் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தும் பொருட்டு தேவஸ்தானம் இந்த ஊசியை மருத்துவமனையில் இலவசமாக செலுத்தும். மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஆகும். அந்த நேரத்திற்குள் இதய தசையில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருப்பதால், உடனடியாக மருந்து கொடுத்தால் ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள உறைவு கரைந்து இரத்த ஓட்டம் சீராகும் என்று கூறியுள்ளனர்.