Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஜேஷ்டாபிஷேகத்தின் 2-வது நாள்… முத்துக்கவசம் அணிந்து மலையப்பசாமி நான்கு மாட வீதிகளில் உலா…!!!

திருப்பதி ஜேஷ்டாபிஷேகம் இரண்டாவது நாள் விழாவில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி உலாவரும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் இரண்டாவது நாளான இன்று உற்சவர் பூதேவி ஸ்ரீதேவியுடன் மலையப்பசாமி முத்து கவசம் அணிந்து ஊர்வலமாக பக்தருக்கு அருள் தந்தார். முன்னதாக காலை கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களைக் கொண்டு வந்தனர். அங்கு 9 மணியிலிருந்து 11 மணி வரை உற்சவர்கள் முன்னிலையில் யாகம் வளர்த்து மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மலையப்ப சாமிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் சத கலச திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு முத்து கவசம் அணிந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் தந்தார். விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |