திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரங்களை கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமலாபுரம் கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் காரில் செம்மரங்களை ஏற்றிக்கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர் .
விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பாலசுப்ரமணியன், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், பள்ளி பேட்டையை சேர்ந்த ரமேஷ், சென்னை திருவேற்காடு சேர்ந்த ரமேஷ், சஞ்சீவி, ஸ்ரீஜித் என்பது தெரியவந்தது. இவர்கள் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.