Categories
மாநில செய்திகள்

திருப்பதி தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்காக அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 2 வருடங்களுக்கு பிறகு திருப்பதியில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனையடுத்து திருப்பதியில் ஆர்ஜித சேவையில் கலந்து கொள்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ரூபாய் 27 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் அரசு மருத்துவமனை பணிகளை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். அதன்பிறகு அமைச்சர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் சென்னை-திருப்பதி சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார். மேலும் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் பாடியிலிருந்து திருநின்றவூர் வரை விரிவாக்கப் பணியை அரசு மேற்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |