திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது பற்றி சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வடசென்னை பகுதியில் திருப்பதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதனால் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அன்று காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் படி அன்று காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக் சாலையை கடக்கும் வரை என் எஸ் சி போஸ் சாலை மின் சாலை அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
மேலும் அந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய வாகனங்கள் ஈவேரா பெரியார் சாலை, ராஜாஜி சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். மாலை 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டக்ஸ் சாலை அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மேலும் இந்த வழித்தடங்களில் செல்ல வேண்டிய வாகனங்கள் பேசின் பாலம் சாலை மின் வழியாக பிரகாசம் சாலை ராஜாஜி சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஊர்வலம் பேசின்பாலம் சாலையில் செல்லும்போது சூலை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும்போது மசூதி சந்திப்பில் இருந்து ஜூலை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
அதேபோல் அங்கு வரும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும்போது நாராயண குரு சாலை, இ வி கே சம்மந்த சாலை சந்திப்பில் இருந்து சூலை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அங்கு வரும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சேரி வழியாக செல்லலாம். அவதான பாப்பையா சாலையில் ஊர்வலம் செல்லும் போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஜூலை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் பெரம்பூர் சாலை வழியாக சென்று கொள்ளலாம். மேலும் ஊர்வலம் பெரம்பூர் சாலையில் செல்லும்போது புரசைவாக்கம் டவ்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.
அந்த வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக சென்று கொள்ளலாம். ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மெல்லரசு சாலை சந்திப்பில் இருந்து பிரிக்களின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக சென்று கொள்ளலாம் இதே போல ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் செல்லும்போது குன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக சென்று கொள்ளலாம் ஊர்வலம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அங்கு வரும் வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் இருந்து புக்ஸ் சாலை வழியாகவும் மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து விபி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் சென்று கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.