அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவராக இருந்தவர் சேகர் ரெட்டி. இவர் தற்போது திமுக ஆட்சியிலும் அதிகார வர்க்கத்திற்கு நண்பராக மாறிவிட்டார். சென்னை தி நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக சேகர் ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனாவார். அதோடு இவர் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். என்னதான் இவர் மத்திய அரசியலுக்கு சென்றாலும் இவருடைய எண்ணமெல்லாம் காட்பாடி பகுதியையே சுற்றி சுற்றி வருவதாக சிலர் கூறுகின்றனர்.
எப்படியாவது வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதே இவருடைய குறிக்கோளாகும். இந்த சூழலில்தான் இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ளூர் ஆலோசனை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முழுக்க முழுக்க இந்த பதவி தொடர்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது சேகர் ரெட்டி. அவர்கள் இருவரும் காட்பாடி தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அளவுக்கு நெருக்கம் காட்டுகிறார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.