Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு…. மகிழ்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 7ம் தேதி முதல் அலிபிரி நடை பாதையில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளதது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் மலையடிவாரத்திலிருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்கின்றனர். இந்த நடைபாதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து இருந்ததால் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதனால் கடந்த சில மாதங்களாக நடைபாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன .இதனால் வருகிற 7ஆம் தேதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் அலிபிரி நடைபாதை வழியாக அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான அதிகாரி கே.எஸ் ஜவகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |