Categories
தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…. குஷியில் ஏழுமலையான் பக்தர்கள்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூபாய் 300 கட்டணத்தில் அடுத்த இரு மாதங்களுகாண தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்தில் டிக்கெட்டுகள் பெற நாளை காலை 9 மணி முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. மேலும் இலவச தரிசன டிக்கெட் நாளை மறுதினம் ஆன்-லைனில் வெளியிடப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வரும் 25ஆம் தேதி 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. இந்த அறைகளை பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் பத்தாயிரம் 300 ரூபாய் டிக்கெட்டுகள் மற்றும் 12000 இலவச டோக்கன்கள வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |