Categories
தேசிய செய்திகள்

திருப்பதி நடைபாதை… அவதிப்படும் பக்தர்கள்… சீரமைப்பு பணி தீவிரம்…!!!

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதை சீரமைக்கப்பட்டு வருவதால் அதில் நடந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி அலிபிரியிலிருந்து திருமலை வரை செல்லக்கூடிய பாதையில் நடைபாதை 25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை அமைத்தல், குடிநீர்,நவீன கழிப்பறை மற்றும் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.அதனால் தற்போது இருக்கின்ற மேற்கூரை முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலணி இல்லாமல் நடந்து செல்வதால்,சீரமைப்பு பணியால் கீழே விழுந்து கிடக்கும் இரும்பு கம்பிகள்,செங்கல் மற்றும் சிமெண்ட் கற்களால் பக்தர்கள் அனைவருக்கும் காயம் ஏற்பட்டு வருகிறது.இருந்தாலும் பக்தர்கள் அந்த வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்கு செல்கின்றனர்.

அந்த நடைபாதையில் 7 கிலோமீட்டர் தூரம் வரையில் கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் கிடைக்கின்றன. அவற்றை உடனடியாக அகற்றி பாதையை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |